சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று காணொளி மூலம் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளனர்.
பாஜகவுக்கு எதிராக இணைந்து செயல்பட எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
எனினும், கட்சிகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
காணொளி மூலம் நடக்கும் இந்த கூட்டத்தில் சரத்பவார், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல மாநிலத் தலைவர்கள் ஆலோசனையில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.