July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘காஷ்மீர் மக்கள் மீது பா.ஜ.க அரசு அடக்குமுறையை ஏவி விடுகிறது’; ராகுல் காந்தி குற்றச்சாட்டு

(FilePhoto)

காஷ்மீர் மக்கள் மீது பா.ஜ.க அரசு அடக்குமுறையை ஏவி விடுகிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சாடியுள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் அங்கு முதல் முறையாக ராகுல் காந்தி சென்றுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் கந்தர்பல் மாவட்டத்தின் துல்முல்லாவில் உள்ள கீர்பவானி துர்கா கோவில் ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பல் தர்காவிலும் ராகுல் காந்தி வழிபாட்டில் ஈடுபட்டார்.

இதனையடுத்து அங்கு தொண்டர்களை சந்தித்து உரையாற்றிய ராகுல் காந்தி, தனது முன்னோர்கள் காஷ்மீரில் வாழ்ந்தவர்கள் எனவும், அது தனக்குள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜம்மு – காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை.காஷ்மீரில் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் இதற்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

டெல்லிக்கு இடம்பெயரும் முன்பு தங்களது குடும்பம் கடினமான வாழ்க்கை வாழ்ந்ததாகவும் அதனால் காஷ்மீருக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தொண்டர்கள் மத்தியில் கூறியிருக்கிறார்.

காஷ்மீரின் ஜீலம் ஆற்று தண்ணீரை குடித்து வளர்ந்தது தங்களது குடும்பம் எனவும் காஷ்மீர் மக்களின் பழக்க வழக்கங்கள், சிந்தனை, செயல்பாடு ‘காஷ்மீரீகள்’ என்ற பெருமை அது தன்னுள்ளும் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மக்களின் அன்பையும், உறவையும் தான் விரும்புவதாகவும்  அவர்களின் வலியையும் துன்பத்தையும் முகம் கொடுத்து வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆர்.எஸ்.எஸ்.இன் பொய்யான பிரசாரத்தால் மக்களுக்கு எதிரான தாக்குதல் நடக்கிறது.அதனை எதிர்த்து ஜனநாயக சக்திகள் போராட வேண்டும் என தொண்டர்களிடம் வலியுறுத்தியுள்ளார் ராகுல் காந்தி.