November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசியை கலந்து பயன்படுத்துவது பாதுகாப்பானது’

கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது பாதுகாப்பானது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்த தடுப்பூசிகளை கலந்து போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் ஐ சி.எம்.ஆர். கூறியுள்ளது.

சமீப காலமாக இரண்டு தடுப்பூசிகளை கலந்து போடுவது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வந்ததுடன், கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் என இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை ஒரு நபருக்கு செலுத்தினால் என்னவாகும் என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதனை ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தியுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்,அவ்வாறு இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் கலந்து போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கலந்து போடுவது தொடர்பாக நடத்திய ஆய்வில் நல்ல முடிவு கிடைத்துள்ளதாக ஐசிஎப் கூறியுள்ளது.

அவ்வாறு இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து போடுவது, பாதுகாப்பானது மட்டும் அல்லாமல், சிறந்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.