November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜோன்சன் அன்ட் ஜோன்சன்’ நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

இந்தியாவில் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவன தயாரிப்பில் உருவான கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸுக்கு எதிராக இரு டோஸ்கள் செலுத்தும் தடுப்பூசி நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனம் ஒருமுறை மட்டுமே செலுத்தும் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளது.

உருமாற்றம் அடைந்த ‘டெல்டா’ வைரஸ் உள்ளிட்ட பல்வேறு வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக  செயல்படும் வகையில் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கமைய  அந்நிறுவனத்தின் தடுப்பூசியை இந்தியாவில் அவசர காலத்தில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

மேலும், ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு (Janssen Ad26.CoV2.S vaccine ) உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.

இதுவரை உலக மக்களின் பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள் அனைத்தும் 2 டோஸ்கள் செலுத்தக் கூடியவையாகும்.

இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,

இந்தியா தனது கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையை விரிவுபடுத்தியுள்ளது. தற்போது இந்தியாவில் 5 தடுப்பூசிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள இந்திய சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை மேலும் இது வலுப்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, இந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 28 நாட்களுக்குப் பின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என கூறப்படுகிறது.