கொரோனா ஆபத்து இன்னமும் முற்றாக நீங்கிவிடவில்லை என்பதை இந்தியர்கள் உணரவேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய மக்களுக்கு ஆற்றிய உரையின் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்;
பண்டிகை காலங்கள் வருவதால் மக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும்.கொரோனா போய்விட்டது என பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக போகவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அலட்சியமாக இருப்பவர்கள் அவர்கள் பாதிப்பதோடு மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். பாதிப்பு குறைவதை கண்டு பலர் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மனிதனைக் காப்பாற்ற உலக அளவில் போர் போன்ற கடும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.நோய் நெருப்பு போன்றவற்றை நாம் எளிதாக கருதக்கூடாது. பண்டிகை காலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..