July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்கு வங்கத்தில் வெள்ளப்பெருக்கு: 14 பேர் மரணம்!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கி இருப்பதால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை இரண்டரை இலட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் அங்குள்ள பள்ளத்தாக்கு திட்ட அணைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஹூக்ளி, ஹவுரா, புர்பா பர்தமான், மேதினிபூர் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹூக்ளி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

படகுகள் மற்றும் ஹெலிகப்டர்கள் உதவியுடன் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கி கொண்டவர்களுக்கு ஹெலிகப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருவதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்துமாறு அமைச்சர்களுக்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருக்கிறார்.