
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு தலைமை வகிக்க போகும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பினராக 2021 மற்றும் 2022-ம்ஆண்டுகளுக்காக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா உள்ளிட்ட 10 நாடுகள் தற்போது தற்காலிக உறுப்பினர்களாக இருக்கின்றன.
இந்த சபையில்அங்கம் வகிக்கும் நாடுகள் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் சபைக்கு தலைமை தாங்குவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஐநா பாதுகாப்பு சபைக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா தலைமை வகிக்கும் காலத்தில் 3 உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என ஐநாவுக்கான இந்திய தூதுவர் டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார் .
மேலும் கடலோர பாதுகாப்பு, அமைதி நடவடிக்கை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ,இந்தியா தலைமை வகிக்கும் இந்தக் காலகட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என ஐநாவுக்கான இந்தியத் தூதுவர் கூறியுள்ளார்
சர்வதேச அளவிலான அமைதியை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா தலைமை பதவியில் செயல்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு தலைமை வகிக்க போகும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார் என ஐநாவுக்கான இந்திய தூதர் கூறியுள்ளார்.
இதை அடுத்து நடைபெற உள்ள அனைத்து உயர்மட்ட கூட்டங்களும் காணொளி முறையில் நடைபெறும் எனவும் ,அதில் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் ஷிருங்லா உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.