January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக சட்டப் பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்

தமிழக சட்டப் பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தார்.

சென்னை வந்த குடியரசுத் தலைவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

தமிழகம் வந்துள்ள குடியரசுத் தலைவருக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல் ஆணையர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் சென்னையின் முக்கிய பகுதிகளில் 5 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா, பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று மாலை நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொள்ளும் குடியரசுத் தலைவர், ஆளுநர் மாளிகையில் இன்று தங்கவுள்ளார்.

அதன் பின்னர் நாளைய தினம், தனி விமானம் மூலம் கா.லையில் மலை பிரதேசமான நீலகிரி மாவட்டத்திற்கு செல்கிறார்.

குடியரசுத் தலைவரின் வருகையால் சென்னை விமான நிலையம் தொடங்கி ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலக வளாகம், சட்டமன்ற மண்டபம் ஆகிய இடங்களில், சென்னை காவல் அதிகாரிகள், போக்குவரத்து காவல், கமாண்டோ படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை என விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.