July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசு ஆலோசனை கூட்டம் நடத்தியிருக்கிறது.

கேரளா,மகாராஷ்டிரா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் கொரோனா பரவி வருகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

முக்கியமாக கேரளாவில் மட்டும் தினம்தோறும் அதிகமாக 20 ஆயிரம் என்ற அளவில் தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது.

இந்நிலையில்,கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் உள்ளிட்ட 10 மாநிலங்களுடன் மத்திய சுகாதாரத் துறை சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் உயர் நிலை ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு,ஆந்திரா,கேரளா,கர்நாடகா,அசாம்,மகாராஷ்டிரா,ஒடிசா, மிசோரம்,மேகாலயா,மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டன.

குறிப்பாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகும் பகுதிகளில் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆங்காங்கே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஊரகப் பகுதிகளில் அவசரகால கொவிட்-19 திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான வசதிகளை அதிகப்படுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையை பதிவு செய்வது குறித்து,இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதல்களின் படி அனைத்து மாநிலங்களும் செயற்பட அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.