தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், 9 ஆம் தேதி வரை அதனை நீடிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக அளவில் கூட்டம் சேர்ந்தால், குறிப்பிட்ட பகுதியை மூட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .