July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்: இந்திய அரசு

ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் அதற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்திருக்கிறது.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அங்குள்ள கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி கேள்வி எழுப்பியிருக்கிறார் .

இதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் நித்தியானந்த ராய் ,ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை முழுமையாக திரும்பியதும் , அங்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்

2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை இந்திய அரசு நீக்கியது.

அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக் -காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன .

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புகளும் முன்வைக்கப்பட்டன.

தொடர்ந்து காஷ்மீரில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட பிறகு நிலைமை சீரானதும், அடுத்து படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டது.

இன்னிலையில் சமீபத்தில் இந்தியா பிரதர் நரேந்திர மோடி காஷ்மீரின் முக்கிய கட்சித் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அப்போதும் ஜம்மு-காஷ்மீரில் நிலைமை சீரானதும் அதற்குரிய மாநில அந்தஸ்து உரிய நேரத்தில் வழங்கப்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.