July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் என்டனி பிளிங்கன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்திய பிரதமரை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ,அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹரிசின் வாழ்த்துக்களையும் பிரதமருக்கு தெரிவித்திருக்கிறார்.

இந்தியா ,அமெரிக்கா இரு நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு,வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு பருவநிலை மாற்றம் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சந்திப்பின்போது ,குவாட் அமைப்பு, கொவிட்-19 மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவற்றில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ,பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அதிகரித்து வரும் கூட்டு நடவடிக்கைகள் குறித்தும், மேலும் இவற்றை வலுப்படுத்துவது தொடர்பாகவும் இருநாடுகளிடையே பேசப்பட்டிருக்கிறது.

இரு நாடுகளுக்கான உறவுகளை மேம்படுத்துவதில் அமெரிக்காவிலுள்ள இந்தியர்கள் சிறப்பாக பங்காற்றி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒப்பந்தம், கொவிட்-19 தொடர்பான செயற்பாடுகள், பருவநிலை மாற்றம் ஆகியவை வரும் காலங்களில் இன்னும் வலுப்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.