இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த கொரோனா தொற்று,கடந்த 24 மணி நேரத்தில் 43,654 ஆக திடீரென அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 640 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் மகாராஷ்டிராவில் 254 பேரும்,கேரளாவில் 156 பேரும், ஒடிசாவில் 60 பேரும் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கேரளா,மகாராஷ்டிரா மாநிலங்களில் தான் 50 வீதத்துக்கு மேல் கொரோனா தொற்று இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிகாக 43 ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சகம், ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 84 ஆயிரத்து 605 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 1,336 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 99 ஆயிரத்து 64 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து இதுவரை 3 கோடியே 6 லட்சத்து 63 ஆயிரத்து 147 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 22 ஆயிரத்து 22 ஆக அதிகரித்துள்ளது.