இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த சீன இராணுவ வீரரை கைதுசெய்துள்ள இந்திய இராணுவத்தினர் அவரை சீன அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக்கின் சுமர்-டெம்சோக் செக்டார் பகுதியில் வாங் யா என்ற சீன இராணு வீரரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் அவரை மீண்டும் சீன இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
மோசமான காலநிலை போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சுகாதார உதவிகளையும், உணவு மற்றும் உடைகளையும் வழங்கியுள்ளதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது.
கடந்த மே மாதம் முதல் லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன படையினர் மோதல்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் 20 ம் திகதி மோதலில் 20 இந்திய படையினர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.