January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பீரங்கியை தாக்கி அழிக்கும் இந்தியாவின் ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இந்தியாவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிரி நாடுகளின் பீரங்கிகளை தாக்கி அழிக்கும் வகையில் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

பீரங்கிகளை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணைகளை, உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்ததாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலகு ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டதாக கூறியுள்ள டிஆர்டிஓ , இந்த ஏவுகணைகளானது தாமாகவே சென்று பீரங்கிகளை அழிக்கக்கூடியவை என கூறியுள்ளது.

முழுவதுமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ,எதிரி நாட்டின் பீரங்கியை தாக்கி அழிக்கவல்ல, ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. இதனால் இந்திய ராணுவத்தின் பலம் அதிகரித்துள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தொலைவில் வைக்கப்பட்டிருந்த மாதிரி பீரங்கியை, இந்த ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாகக் கூறப்படுகிறது.

ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததால் , அந்த ஏவுகணை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.