January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: 24 மணி நேரத்தில் 42 ஆயிரம் பேருக்கு தொற்று!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் ,கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் புதிதாக 42 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை இந்தக் காலப்பகுதியில் 3,998 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 3,509 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரம் கூறுகின்றது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு 3,998 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 418,480 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிகாக 42,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 470,170 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளோனோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 16 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 3 கோடியே 3 லட்சத்து 90 ஆயிரத்து 687 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் இதுவரை 41.54 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.