July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் சசிகலாவால் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது’

சசிகலா

எம்.ஜி.ஆருக்கே அரசியல் ஆலோசனை வழங்கியதாக கூறிய சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது என்று அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, சசிகலாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஏற்கெனவே பலமுறை கூறியுள்ள நிலையில், அவர் வேண்டுமென்றே பல்வேறு பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தோடு, சசிகலா அ.தி.மு.க.வில் இருந்த காலத்திலும் தேர்தலில் கட்சி தோல்வியை சந்தித்திருக்கிறது எனவும் சசிகலாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என  அவர் குறிப்பிட்டுள்ளார் .

அதேவேளை, நீட்தேர்வு ரத்து விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது. தற்போது உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம்சாட்டியது போல அ.தி.மு.க அரசு இருந்தபோது கொரோனா தடுப்பூசிகள் வேண்டுமென்றே வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக அரசு ,கொரோனா மூன்றாம் அலை பரவும் சூழலில் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து பெற வேண்டும் என எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு காவிரி நதி நீர் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி,

மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும், நதி நீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில், கர்நாடகா இனிமேல் காவிரியின் குறுக்கே அணைகள் தடுப்பணைகள் கட்டக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.