January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவின் எம்.எச்.60ஆர் ரக ஹெலிகொப்டர்களை வாங்கியது இந்தியா

அமெரிக்காவிடமிருந்து எம்.எச்.60 ஆர் ரகத்தை சேர்ந்த 2 ஹெலிகொப்டர்களை இந்தியா வாங்கியுள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய இந்த இரண்டு ஹெலிகொப்டர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நவீன ஏவியானிக்ஸ் மற்றும் சென்சார் கருவிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த எம்.எச்.60 ஆர் ஹெலிகொப்டர்கள் அனைத்து காலநிலைகளிலும் பயன்படுத்தக் கூடியது என கூறப்படுகிறது.

இந்த ஹெலிகொப்டர்கள்,இந்தியாவுக்கு தேவையான தனிச் சிறப்பான கருவிகள் மற்றும் ஆயுதங்களுடன்,பன்முகத் தன்மை கொண்டதாக தயாரிக்கப்படுகிறது.

இந்திய கடற்படையின் முப்பரிமாண திறனை இந்த ஹெலிகொப்டர்கள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த நவீனத்துவம் மிக்க ஹெலிகொப்டர்களை இயக்குவதற்காக, இந்திய கடற்படை குழுவினருக்கு தற்போது அமெரிக்காவில் பயிற்சி வழங்கப்படுகிறது.

இராணுவ தளவாட விற்பனை திட்டத்தின் கீழ் அமெரிக்காவிடமிருந்து 24 எம்.எச்.60 ஆர் ரக ஹெலிகொப்டர்களை இந்தியா வாங்க உள்ளது.

அமெரிக்காவின் சான்டியாகோ நார்த் ஐலேண்ட் கடற்படைத் தளத்தில் வைத்து 2 எம்.எச்.60 ஆர் ரக ஹெலிகொப்டர்களை இந்திய கடற்படை பெற்றுக் கொண்டது.

இதனை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து உடனிருந்து பெற்றுக் கொண்டார்.