November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா தொற்று குறைந்ததும் இந்திய- இலங்கை மீனவர்களிடையே பேச்சு’

(File Photo:DMK/Twitter)

கொரோனா தொற்று குறைந்ததும் இந்திய- இலங்கை மீனவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை இடம்பெறும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகத்தை இன்று (16) பார்வையிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ‘கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை, கொரோனா தொற்று குறைந்த பின்னர் விரைவில் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசால் கொண்டு வரப்படவுள்ள புதிய மீன்பிடி மசோதாவால் தமிழக மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமானால், நிச்சயம் தமிழ்நாட்டு மீனவர் உரிமை காப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் எனவும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அத்துடன், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் துறைமுகத்தை 200 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தின் முதன்மை மீன்பிடித் துறைமுகமாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடைபெற்றும் இன்னும் உரிய தீர்வு எடுக்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.