இந்தியாவின் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 குழந்தைகள் கொரோனா அறிகுறியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம் அவர்களில் 9 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் நேற்றுவரை ஒரு வயது முதல் 6 வயதுக்கு உட்பட்ட 16 குழந்தைகள் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கத்துக்கு மாறாக குழந்தைகளுக்கான நோய்த்தொற்று அதிகமாகி வருவதால் அந்த மாநில மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொரோனா மூன்றாவது அலை வராது என கூற முடியாது, இருந்தபோதிலும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் புதுச்சேரியில் ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் பரவலும் கண்டறியப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.