July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘டுவிட்டர் கணக்குகளின் பின்னணி விபரங்களை கேட்பதில் இந்தியா முதலிடம்’

டுவிட்டரில் உள்ள கணக்குகளின் பின்னணி விபரங்களை கேட்பதில் இந்தியா முன்னணியில் இருப்பதாக டுவிட்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையில் தங்கள் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த விவரங்களின்படி, டுவிட்டரில் பதிவிட்டோர் விபரங்களை கேட்ட உலக நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக டுவிட்டர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

25 விகித கோரிக்கைகள் இந்திய அரசிடம் இருந்து மட்டுமே வந்திருப்பதாகவும் கடந்தாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையில் டுவிட்டர் தொடர்பான செயல்பாடுகள் குறித்த வெளிப்படைத்தன்மை அறிக்கையை டுவிட்டர் இந்தியா வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க சட்ட ரீதியாக கோரிக்கை வைத்த நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்திலும், இந்தியா 2ஆம் இடத்திலும் இருப்பதாக டுவிட்டர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், டுவிட்டரில் இந்தியா தொடர்பான பிரச்சினைகளை அணுக அதிகாரிகளை நியமிக்கக் கூறியதில் ஏற்பட்ட சிக்கல் நிலைமை பல நீதிமன்ற வழக்குகளை தாண்டி தற்போது ஓரளவு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.