July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம்: இஸ்ரோவின் என்ஜின் சோதனை வெற்றி

Photo: isro/Twitter

இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்தில் விண்கலத்தின் என்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பல்வேறு பரிசோதனை முயற்சிகளில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் விண்கலத்திற்கான என்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.

விண்வெளிக்கு GSLV MK III  என்ற விண்கலம் அனுப்பப்படவுள்ளது. ‘GSLV MK III’   என்ற இந்த விண்கலத்தின் திரவ என்ஜின் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இந்த விண்கலத்தின் திரவ வெப்ப பரிசோதனை வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

240 வினாடிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்ட நிலையில், என்ஜின் வெப்ப பரிசோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதேவேளை மூன்றாம்கட்ட மற்றும் இறுதிச் சோதனை இன்னும் ஒன்றரை மாத காலத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.