June 17, 2025 12:00:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் விஜய்க்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்!

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த ‘ரோல்ஸ் ராய்ஸ்’ காருக்கு வரி வசூலிக்க தடைக் கோரியிருந்தார் நடிகர் விஜய்.

விஜய்யின் இந்த கோரிக்கை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அந்தக் கோரிக்கையை  நிராகரித்து தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், அபராதத் தொகையை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை ‘நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது’ என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, சமூகநீதிக்கு பாடுபடுவதாக கூறும் நடிகர்கள் இதுபோன்ற வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.