(Photo: AmitShah /Twitter)
இந்தியாவின் வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டவர் பிரதமர் நரேந்திர மோடி என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றிய அமித்ஷா,
‘பிரதமர் மோடி போன்ற ஒரு தலைசிறந்த தலைவரை பார்ப்பது மிகவும் அரிது எனவும், குஜராத்தில் 14 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த போது வளர்ச்சிக்கு வித்திட்டார்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 244 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அகமதாபாத்தில் அவர் அடிக்கல் நாட்டி இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு தலைவர்களை பார்த்துள்ளதாகவும், அவர்களில் மிகவும் சிறப்பாக செயல்படுபவர் பிரதமர் மோடி என புகழ்ந்துள்ளார் அமைச்சர் அமித் ஷா.
பிரதமர் நரேந்திர மோடி காட்டிய வழியில் வேகமாக வளர்ச்சியடைந்த குஜராத் இன்றும் முன்னேற்ற பாதையில் செல்வதாகவும், கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டபோது விரைந்து செயல்பட்டு நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒக்சிஜன் ஆலைகள் அமைத்து அதற்கு தீர்வு கண்டதாகவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.