May 1, 2025 14:46:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதுச்சேரியில் அமைச்சர்களின் இலாகாக்கள் ஒதுக்கீடு

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சர்களின் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ரங்கசாமிக்கு கூட்டுறவுத்துறை, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம், அறநிலையத்துறை உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

க.லட்சுமி நாராயணன்-பொதுப்பணித்துறை, சுற்றலாத்துறை, விமானப் போக்குவரத்து, மீன்வளத்துறை, சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, அச்சகம்.

தேனி சி.ஜெயக்குமார் – வேளாண், கால்நடைத்துறை, வனத்துறை, சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்.

சந்திரபிரியங்கா – ஆதி திராவிடர் நலன், போக்குவரத்து, வீட்டு வசதித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு, கலை மற்றும் கலாசாரம்.

ஏ.நமச்சிவாயம் – உள்துறை, மின்சாரத்துறை, தொழில்கள் மற்றும் வர்த்தகம், கல்வித்துறை.

சாய் ஜெ.சரவணன்குமார் – நுகர்பொருள் வழங்கல், ஊரக வளர்ச்சித்துறை, சிறுபான்மையினர் நலன், சமூக மேம்பாடு, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.