தமிழ்நாட்டில் ஜூலை 19 ஆம் திகதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழக அரசு புதிய ஊரடங்கு தளர்வு ,கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் தொடர்ந்தும் திரையரங்குகள், மது கூடங்களை திறக்க மேலும் 1 வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள், தேநீர் கடைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரவு 9 மணி வரை இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், தமிழகம் – புதுச்சேரி இடையே பேருந்து சேவை திங்கட்கிழமை முதல் தொடங்குவதுடன், ஏனைய மாநிலங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அத்தோடு பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளுக்கான தடை தொடரும் எனவும் திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உணவகம், தேநீர் கடைகள், பேக்கரி, நடைபாதை கடைகள், இனிப்பு, கார வகை கடைகளுக்கு இரவு 9 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடைகள் 50 வீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் எனவும் இரவு 8 மணி வரை கடைகளுக்கு இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.#CMMKStalin |#Lockdown_Extension | #TNDIPR |#செய்தித்துறை@mkstalin @mp_saminathan
1/2 pic.twitter.com/8Sdt011sly— TN DIPR (@TNDIPRNEWS) July 10, 2021