November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் டிசம்பரில் தடுப்பூசி தயாராகிவிடும்; பிரபல மருந்து நிறுவனம் அறிவிப்பு

எதிர்வரும் வரும் டிசம்பர் மாதமளவில் இந்தியாவில் 30 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி தயாராகி விடும் என்று பிரபல மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும் கொரோனாவை தடுக்க கூட்டாக ‘கோவிஷீல்ட்’ என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.

இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்தி, தடுப்பூசிகளை தயாரித்து விநியோகிக்க புனேயை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது.

இந்த தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைகள் மும்முரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

“இந்தியாவில் டிசம்பர் இறுதியில் 20 கோடி முதல் 30 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி தயாராகி விடும். இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உரிமம் தந்தவுடன், தடுப்பூசி வெளியீட்டை தொடங்கி விடலாம்.

எல்லா அனுமதியையும் பெற்றுவிட்டால் மாதம் ஒன்றுக்கு 6 கோடி முதல் 7 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி உற்பத்தியை இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் மேற்கொள்ள முடியும்” என்று நிறுவனத்தின் செயல் இயக்குனர் டாக்டர் சுரேஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.