
தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அண்ணாமலை ஐ.பி.எஸ் ஆக பணிபுரிந்து பின்னர் தனது பதவியை துறந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
முன்னதாக தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவராக இருந்த எல்.முருகன் இந்திய மத்திய அமைச்சரவையில் மீன்பிடித் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதனால் அவர் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.இந்நிலையில் தமிழக மாநில பா.ஜ.க தலைவராக அண்ணாமலைக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.