July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘லெம்ப்டா’ வைரஸ் ‘டெல்டா’ வகைகளை விட ஆபத்தானது!

‘லெம்ப்டா’ வைரஸ் தொற்றுக்கு இதுவரை இந்தியாவில் யாரும் பாதிக்கப்பட்டுள்ளதாக எந்த பதிவும் கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் 3 ஆவது அலையை எதிர் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், டெல்டா வகைகளை விட ஆபத்தாக உருமாறிய ‘லெம்ப்டா’ என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெரு நாட்டில் இந்த வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வைரஸுக்கு பெருவில் மே மற்றும் ஜூன் மாதங்களில் 82 வீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த வைரஸ் தற்போது இங்கிலாத்திலும் பரவி உள்ளதாக இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

அதேநேரம், வெளிநாடுகளுக்கு சென்று இங்கிலாந்து வந்த 6 பேருக்கு இந்த வைரஸ் உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 வாரத்தில் மட்டும் 30 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளதுடன், இந்த லெம்ப்டா வைரஸ் பல நாடுகளுக்குள் வேகமாக பரவும் என அஞ்சப்படுகிறது.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 30 நாடுகளில் லெம்ப்டா வகை கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது.

அண்மையில் உலக சுகாதார நிறுவனம், லெம்ப்டா வகை கொரோனா வைரஸைVARIANT OF INTEREST பிரிவில் சேர்த்திருக்கிறது.

அதாவது தீவிரமாக கண்காணிக்க வேண்டிய வைரஸ் என இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.