இந்திய மத்திய அமைச்சரவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 43 அமைச்சர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 43 பேர் பதவி பிரமாணம் செய்து கொண்டனர் .
இந்த புதிய அமைச்சர்களுக்கான துறைகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை.கூடிய விரைவில் இவர்களுக்கான பொறுப்புகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
புதிய மத்திய அமைச்சரவையில் 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியியலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 43 பேரில் 14 பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் என கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருந்தது.இந்நிலையில் புதிதாக 43 அமைச்சர்கள் இணைந்துள்ளார்கள்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் நிலையில் பொறுப்பிலுள்ள 12 மத்திய அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜனாமா செய்துள்ளனர்.
இதன்படி புதிய அமைச்சரவை அமைய ஏதுவாக இடமளித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் மற்றும் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் தமது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்த்தன் ராஜினாமா செய்தார்.தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கத்துக்கு அரைமணி நேரம் முன்னதாக சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதவி விலகி இருக்கின்றனர்.
இவர்களின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டார்.
புதிய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டவர்களின் விபரம் –
1) நாராயண் ரானே (மராட்டியம்)
2) சர்வானந்தா சோனாவால் (அசாம்)
3) வீரேந்திர குமார் (மத்திய பிரதேசம்)
4) ஜோதிர் ஆதித்ய சிந்தியா (மத்திய பிரதேசம்)
5) ஆர்.சி.பி. சிங் ( பீகார்)
6) அஷ்வினி வைஷ்ணவ் (ஒடிசா)
7) பசுபதி குமார் பராஸ் (பீகார்)
8) கிரண் ரிஜிஜூ (அருணாச்சல பிரதேசம்)
9) ராஜ்குமார் சிங் (பீகார்)
10 ) ஹர்தீப் சிங் பூரி (பஞ்சாப்)
11) மன்சுக் மாண்டவியா (குஜராத்)
12) பூபேந்தர் யாதவ் (ராஜஸ்தான்)
13) புருசோத்தம் ரூபாலா (குஜராத்)
14) கிஷன் ரெட்டி (தெலுங்கானா)
15) அனுராக் சிங் தாகூர் (இமாச்சல பிரதேசம்)
16) பங்கஜ் சவுத்ரி (உத்தர பிரதேசம்)
17) அனுபிரியா சிங் படேல் (உத்தர பிரதேசம்)
18) டாக்டர் சத்யபால் சிங் பாகேல் (உத்தர பிரதேசம்)
19) ராஜீவ் சந்திர சேகர் (கர்நாடகா)
20) ஷோபா கரண்ட்லேஜே (கர்நாடகா)
21) பனு பிரதாப் சிங் வர்மா (உத்தர பிரதேசம்)
22) தர்சனா விக்ரம ஜர்தோஷ் (குஜராத்)
23) மீனாட்சி லெகி (டெல்லி)
24) அனுப்பிரியா தேவி (ஜார்கண்ட்)
25) ஏ.நாராயணசாமி (கர்நாடகா)
26) கவுசல் கிஷோர் (உத்தர பிரதேசம்)
27) அஜய் பட் (உத்தரகாண்ட்)
28) பி.எல்.வர்மா (உத்தர பிரதேசம்)
29) அஜய் குமார் (உத்தர பிரதேசம்)
30) சவுகான் தேவு சிங் (குஜராத்)
31) பகவந்த் குபா (கர்நாடகா)
32) கபில் மோர்சவர் படேல் (மராட்டியம்)
33) சுஷ்ரி பிரதிமா பவுமிக் (திரிபுரா)
34) சுபாஷ் சர்கார் (மேற்கு வங்காளம்)
35) பக்வத் கிஷண்ராவ் காரத் (மராட்டியம்)
36) ராஜ்குமார் ரஞ்சன் சிங் (மணிப்பூர்)
37) பார்தி பிரவின் பவார் (மராட்டியம்)
38) பிஸ்வேஸ்வர் துடு (ஒடிசா)
39) சாந்தனு தாகூர் (மேற்கு வங்காளம்)
40) முஞ்சபரா மகேந்திரபாய் (குஜராத்)
41) ஜான் பர்லா (மேற்கு வங்காளம்)
42) எல்.முருகன் (தமிழகம்)
43) நிஷித் பிரமனிக் (மேற்கு வங்காளம்)