January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரபல பொலிவுட் நடிகர் திலிப் குமார் காலமானார்

பிரபல பொலிவுட் நடிகர் திலிப் குமார் உடல்நலக்குறைவால் காலமானார்.

மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த இவர், தனது 98 ஆவது வயதில் இன்று காலை காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘ஜ்வார் பாட்டா’ என்ற இந்தி படத்தின் மூலம் 1944 ஆம் ஆண்டில் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த திலிப் குமார், பொலிவுட்டில் தனித்துவமான நடிப்பின் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தார்.

சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதி பெற்ற முதல் நடிகர் என்ற பெருமையை திலிப் குமார் கொண்டுள்ளார். அதன் பின் 8 முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது இந்திய அரசாங்கம் 1994 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

இதேவேளை இவரின் நடிப்பில் வெளியான ‘மேரே சப்பு நோக்கி ராணி துஜே ஆயா கீது’ என்ற பாடல் மிகவும் பிரபலமடைந்த பாடல்களில் ஒன்றாகும்.

நடிகர் திலீப் குமாரின் மறைவையொட்டி இவர் நடித்த படங்களின் வீடியோக்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து நினைவு கூர்ந்து வருகின்றனர்.