January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெருந் தொற்றால் அனைத்து நாடுகளிலும் ஏற்பட்ட உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி 

ஒரே பூமி ,ஒரே சுகாதாரம் என்பதன் மூலம் மனித இனம் கொரோனா பெருந்தொற்றை வெல்லும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோவின் குளோபல் எனும் சர்வதேச மாநாட்டில் உரையாற்றும் பொழுது தெரிவித்துள்ளார்.

முதலில் உலக நாடுகளில் இந்த பெருந் தொற்றால் உயிரிழந்த அனைவருக்கும் தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.

கடந்த நூறு ஆண்டுகளில் இதுபோன்றதொரு பெருந் தொற்று ஏற்படவில்லை.இந்த கொரோனா பெருந் தொற்றின் வழியாக, மனித இனம் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம் அனைவரும் இணைந்து பணியாற்றி முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதுதான்.

கொவிட் 19 ஐ எதிர்த்துப் போராடும் பணியில் உலகின் பிற நாடுகளுக்கான டிஜிட்டல் உதவிக்காக கோவில் தள பயன்பாடு அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது என கூறப்படுகிறது.

200 மில்லியன் பேர் வரையில் இந்தியாவின் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

என்னதான் பெரிய சக்தி வாய்ந்த நாடாக இருந்தாலும்,இதுபோன்ற சவாலை தனியாக தீர்க்க முடியாது.பெருந் தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில்,தொழில் நுட்பத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தொழில் நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால்தான் இந்தியாவின் கொவிட் கண்காணிப்பு மற்றும் கண்டுபிடிப்பு செயலியை அனைத்து நாடுகளும் பயன்படுத்தும் விதமாகியுள்ளது.

தனது அனுபவங்கள், தொழில்நுட்பம் மற்றும் வளங்கள் அனைத்தையும் உலக சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள இந்தியா  உறுதியுடன் இருக்கிறது.

அதேபோல உலக நடைமுறைகளை கற்பதிலும் இந்தியா ஆர்வமாக இருப்பதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.