இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக 2 கோடியே 27 லட்சம் பேர் வேலை இழந்ததுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இந்த 2 கோடியே 27 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டில் ஏப்ரல், மே, ஜூன் என மூன்று மாதங்களுக்கு பிறகு இவ்வாண்டு மே மாதத்தில்தான் இந்தியாவின் வேலை வாய்ப்பின்மை இரட்டை இலக்கத்தில் பதிவாகியுள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக புதுச்சேரியில் 47.1 வீதம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மே மாதத்தில் 28 வீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை ஜூன் மாதத்தில் 8.3 வீதமாக குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில்,மே மாதம் முதல் நடுத்தர, சிறு, குறு நிறுவனங்கள் பொது முடக்கத்தால் மூடப்பட்டிருந்ததால் வேலையின்மை அதிகரித்ததாகவும் ஜூன் மாதத்தில் அவை செயல்பட தொடங்கியதால் வேலையின்மை குறைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று மிகத் தீவிரமாக பரவிய போது ஏராளமானோர் வேலை இழந்தனர்.அதைப் போலவே, இந்த ஆண்டு இரண்டாவது அலையின் போதும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.
Centre For Monitoring Indian Economy எனப்படும் இந்திய பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையம் நடத்திய ஆய்வில் கடந்த மே மாதத்தில் 11.9 வீதமாக இருந்த வேலையின்மை ஜூன் மாதத்தில் 9.17 வீதமாக குறைந்தது என சொல்லப்படுகிறது.