தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாவட்டங்களிலும் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன்,தமிழகத்தில் இ-பாஸ் மற்றும் இ-பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து துணிக்கடை, நகைக்கடைகள் 50 வீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,தமிழகத்திலுள்ள அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
உணவகங்களில் 50 வீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொழுது போக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,அனைத்து வகை கடைகளும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உட்பட மலைப்பகுதிகளுக்கு செல்ல திங்கள் முதல் இ-பாஸ் தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீச்சல் குளங்கள், மதுபான பார்கள், உயிரியல் பூங்காக்களுக்கு தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.