May 15, 2025 14:59:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பொருளாதார சவால்களை இலங்கை-இந்தியா இணைந்து எதிர்கொள்ள வேண்டும்”

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினை எதிர்கொண்டது போன்று, உலகளாவிய பொருளாதார சவால்களையும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைகோர்த்து எதிர்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது, ஒத்துழைப்புகளை வழங்கிய இந்திய  கடலோர காவற்படையினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கேந்திர முக்கியத்துவமும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பின் அவசியமும் எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

குறித்த நிகழ்வு, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்தஓபி சாஹார் ஆரக்க்ஷா கப்பலில் நடைபெற்றது.

இதில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.