July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவின் ‘மொடர்னா தடுப்பூசி’க்கு இந்தியாவில் அனுமதி!

அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பான ‘மொடர்னா கொரோனா தடுப்பூசி’யை அவசர கால பயன்பாட்டுக்கு இறக்குமதி செய்ய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் ‘டெல்டா பிளஸ்’ கொரோனா தொற்று 11 மாநிலங்களில் பரவியிருக்கும் நிலையில் அதற்கான தடுப்பூசிகளை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது மத்திய அரசு.

இந்நிலையில் மூன்றாவது கொரோனா அலையை முற்றிலும் தவிர்க்கும் விதமாக இந்தியா முழுவதும் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போது இந்தியாவில் கோவாக்ஸின், கோவிசீல்ட், ஸ்புட்னிக்- வி போன்ற தடுப்பூசிகள் பாவனையில் உள்ளதுடன் இந்திய தயாரிப்பான ‘2டிஜி தடுப்பு மருந்து’ மற்றும் அடுத்ததாக அமெரிக்காவின் கோவாவாக்ஸ் தடுப்பு மருந்து போன்றன பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இதனையடுத்து தற்போது அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

நீண்டகாலமாக வெளிநாட்டு தடுப்பூசியை வாங்குவது பரிசீலனையில் இருந்த நிலையில், அவசர கால பயன்பாட்டுக்கு இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவில் கொரோனா தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 4 ஆவது தடுப்பூசி இதுவாகும்.