January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி பி’ ஏவுகணை பரிசோதனை வெற்றி

இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி பி’ ஏவுகணை பரிசோதனை வெற்றி அடைந்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ அறிவித்துள்ளது.

‘அக்னி பி’ ஏவுகணை ஒடிசா மாநிலத்தின் பலாசோர் அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தளத்தில் இருந்து இன்று ஏவப்பட்டது.

1000 முதல் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறனை இந்த ஏவுகணை கொண்டுள்ளது.

இந்த அக்னி ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது என டிஆர்டிஓ தெரிவித்திருக்கிறது.

அக்னி பி ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணித்து மிகத் துல்லியமாக இலக்கை அடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.