January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவின் நோவாவாக்ஸ் கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் இந்தியாவின் சீரம் நிறுவனம்

இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை தயாரிக்கும் சீரம் நிறுவனம் அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பு மருந்தை,கோவோவாக்ஸ் என்ற பெயரில் தயாரிப்பதற்கான உரிமத்தை பெற்றுள்ளது .

சீரம் மருந்து நிறுவனம் 2 ஆவதாக கோவோவாக்ஸ் தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் செயல்பட்டு வரும் சீரம் நிறுவனம் பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட், அஸ்ட்ராசெனிகா நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்ட் மருந்தை தயாரித்து வருகிறது.

அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கோவோவாக்ஸ் தடுப்பு மருந்து கொரோனா வைரஸுக்கு எதிராக சீரம் நிறுவனம் தயாரிக்கும் 2 ஆவது தடுப்பூசியாகும்.

பிரிட்டன் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த கோவோவாக்ஸ் தடுப்பூசி 89.3 சதவீதம் சிறப்பாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வகைகளுக்கு எதிராக கோவோவேக்ஸ் சிறப்பாக செயல்படுகிறது என சீரம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கோவோவாக்ஸ் தடுப்பு மருந்து 18 வயது குறைந்தவர்களுக்கு சிறப்பாக செயல்படும் என நம்புவதாக சீரம் நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.