January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா மூன்றாவது அலை இரண்டாவது அலை போல் தீவிரமாக இருக்காது’; இந்திய மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவிப்பு

இந்தியாவில்,கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் கூட அது இரண்டாவது அலை போல தீவிரமாக இருக்காது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள் .

அடுத்த சில மாதங்களில்,கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐ.சி.எம்.ஆர். சார்பில் கணிதவியல் கோட்பாட்டின் கீழ், அதன் தாக்கம் எப்படியிருக்குமென ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

2021 இறுதிக்குள், 18 வயதை கடந்த அனைவருக்கும் சரியாக 94.4 கோடி இந்தியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டுமென்பது மத்திய அரசின் இலக்காக இருக்கிறது.

மத்திய அரசின் இந்த இலக்கு நிறைவேற்றப்பட்டால் மட்டுமே மூன்றாவது அலை கொரோனாவை எதிர்கொள்வது, அரசுக்கு மிகவும் எளிதாக இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.

அதில் இந்தியாவில் பெரும்பான்மையானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு விடும் என்பதால் கொரோனாவின் தாக்கம் ஓரளவு குறையும் என தெரிய வந்திருக்கிறது.

அதனால் இரண்டாவது அலைபோல் மூன்றாவது கொரோனா அலை தீவிரமாக இருக்காது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.

இருந்தபோதிலும் மூன்றாவது கொரோனா திரிபு புதிய மாறுபாட்டை கொண்டிருக்கும் எனவும், நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டதாகவும் எளிதில் பரவக்கூடியதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இருந்த போதிலும் கொரோனா தடுப்பு ஊசிகள் இதன் பரவலை தடுக்குமென விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.

வரும் மூன்று மாதத்திற்குள் குறைந்தது 40 சதவீத மக்கள் இரு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்டால் மூன்றாவது கொரோனா அலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 55 சதவீதத்திற்கு மேல் குறையும் என கூறப்படுகிறது.