July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்டா பிளஸ்; தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

இந்தியாவில் டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்திருக்கிறது.

11 மாநிலங்களில் 48 பேருக்கு இதுவரை டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில் 20 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது .

தமிழ் நாட்டில் 9 பேருக்கும் மத்திய பிரதேசத்தில் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.இந்நிலையில் டெல்டா பிளஸ் கொரோனா பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறது.

டெல்டா பிளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி இருக்கிறது.

‘டெல்டா பிளஸ்’ வகை வைரஸ் நுரையீரலை கடுமையாக பாதித்து நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

கொரோனா மேலும் பரவாமல் தடுக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

சென்னை,காஞ்சிபுரம்,மதுரை பகுதிகளில் கொரோனா தீவிர பரிசோதனை,தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

டெல்டா பிளஸ் கொரோனா தமிழகத்தில் பரவி வரும் இந்த நேரத்தில் மேலும் தளர்வுகளை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.