July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு; அன்புமணி ராமதாஸ் கண்டனம்

வங்கக் கடலில் கச்சதீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறலை இந்திய அரசு இனியும் பொறுத்து கொண்டிருக்க கூடாது என அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் வாயிலாக கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் நல்வாய்ப்பாக 9 மீனவர்களும் காயமின்றி உயிர் தப்பியதாக அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார் .

இருந்த போதிலும் மீனவரின் படகு சேதம் அடைந்துவிட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார் .

இலங்கை கடற்படையினரின் இந்தச் செயலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும் சேதமடைந்த படகு உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ள அன்புமணி ராமதாஸ், அதற்கு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சதீவை மீட்க சட்டபூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.