February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

15 ஆண்டுகளுக்கு பின்னர் ரயிலில் பயணிக்கும் இந்தியக் குடியரசுத் தலைவர்

(Photo: President of India/Twitter)

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதன்முறையாக ரயிலில் தனது சொந்த ஊருக்கு பயணமானார்.

குடியரசுத் தலைவரான பிறகு முதன் முதலாக தனது சொந்த கிராமத்திற்கு செல்வதுடன் குடியரசுத் தலைவராக இருக்கும் ஒருவர் 15 ஆண்டுகளுக்கு பின் ரயில் பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பராங்க் கிராமம் தான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சொந்த ஊராகும்.

ரயில் மூலம் பயணிக்கும் அவர் பொதுமக்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து, சிறப்பு ரயில் மூலம் குடியரசுத் தலைவர் மற்றும் அவரது மனைவியும் பயணமாகியுள்ளனர்.

இந்த ரயில் பயணத்தின் இடையே குடியரசுத் தலைவர் தமது பள்ளிப்பருவ மற்றும் பல நண்பர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தமது பிறந்த ஊரில் நடைபெறும் பாராட்டு விழாவில் அவர்  கலந்துகொள்ளவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 28ம் திகதி கான்பூர் மத்திய ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயிலில் லக்னோ பயணமாகவுள்ளார்.

அதன் பின்னர், ஜூன் 29ஆம் திகதியன்று, அவர் சிறப்பு விமானம் மூலம் டெல்லி திரும்பவுள்ளார்.

இறுதியாக கடந்த 2006 ஆம் ஆண்டு மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் டேராடூன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.