February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் 3 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மூன்று கோடியை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது அதன் தாக்கம் குறைய தொடங்கியிருக்கிறது.

இந்தியாவில் நேற்றைய தினம் 42 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அதன் எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,00,28,709 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 68,817 பேர் குணம் அடைந்துள்ளதாக  சுகாதாரத் துறை தெரிவிக்கின்றது.

இதனையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,89,94,855 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் தற்போது நாடு முழுவதும் 6,43,194 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1,358 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் இதுவரை இந்தியா முழுவதுமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,90,660 ஆக கணக்கிடப்பட்டுள்ளது.