January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியா’ என்பது அடிமைப் பெயர், அதனை ‘பாரத்’ என மாற்ற வேண்டும்; நடிகை கங்கனா வலியுறுத்தல்!

இந்தியா என்பது அடிமை பெயர் எனவும் அதனை மாற்ற வேண்டும் எனவும் நடிகை கங்கனா ரனாவத் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று பெயரை மாற்றி வைக்க வேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியிருக்கிறார்.

இந்தியா என்ற பெயர் ஒரு அடிமை பெயர் எனவும், இதனை மாற்றி நமது நாட்டின் பழைய பெயரான பாரதம் என்பதையே வைக்க வேண்டும்.அப்போது தான் நாடு வளர்ச்சி அடையும் எனவும் கங்கனா ரனாவத் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்தியா என்ற அடிமைப் பெயரை, பிரிட்டிஷ்காரர்கள் நாட்டுக்கு வைத்ததாக கூறியுள்ள கங்கனா, இது சிந்து நதியின் கிழக்குப் பகுதியை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டது என குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படியெல்லாமா நாட்டுக்கு பெயர் வைப்பார்கள் என கேள்வி எழுப்பியுள்ள கங்கனா ரனாவத் , பிறந்த குழந்தைக்கு சின்ன மூக்கு, 2 ஆவதாக  பிறந்தவன் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்க முடியுமா? எனக் கேட்டிருக்கிறார்.

இந்தியா அதன் பண்டைய ஆன்மீகம் மற்றும் கலாசாரத்தில் இருந்தால் மட்டுமே வளர முடியும் எனவும், ஆகவே அடிமை பெயரான இந்தியாவை மாற்றிவிட்டு பாரத் என பெயர் வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பாரதம் என பெயர் மாற்றினால் வேதங்கள், பகவத் கீதை மற்றும் யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால் உலகின் மிகப் பெரிய நாடாக வளர்வோம் என கூறியிருக்கிறார்.

“நாம் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்பே எமக்கென்று ஒரு கலாசாரமும் நாகரீகமும் இருந்தது. பழைய பெயரான பாரத் என்ற பெயரை நாட்டிற்கு வைத்து, இழந்த பெருமையை மீட்போம்”

என சமூக வலைத்தளத்தில்  கங்கனா ரனாவத் குறிப்பிட்டிருக்கிறார்.