
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொகை 3 கோடியை நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளதுடன், கடந்த 24 மணி நேரத்தில் 53,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுவரை நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 2 கோடியே 99 இலட்சத்து 35 ஆயிரத்து 221 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்றைய கொரோனா தொற்றான 53, 256 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும்போது, கடந்த 88 நாட்களில் குறைவான தினசரி பாதிப்பாகும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1422 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3 இலட்சத்து 88 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இன்று (21) மட்டும் 78 ஆயிரத்து 190 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 88 இலட்சத்து 44 ஆயிரத்து 199 ஆக இருக்கிறது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 இலட்சத்து 2 ஆயிரத்து 887 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இந்தியாவில் இதுவரை 28 கோடியே 36 ஆயிரத்து 898 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.