(Photo: IndianAirForce/Twitter)
பிரான்ஸின் 36 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த ஆண்டுக்குள், இந்திய விமானப்படையில் இணைக்கப்படும் என விமானப் படையின் தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதௌரியா தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் இருந்து, இதுவரை 21 போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்தடைந்துள்ளன.
இந்நிலையில் மீதமுள்ள ரஃபேல் போர் விமானங்கள் 2022 க்குள் இந்திய விமானப்படையில் இணைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா பரவல் காரணமாக ஒன்றிரண்டு விமானங்கள் தாமதமாக வந்தன. மற்றவை குறிப்பிட்ட காலத்திற்குள் வந்தடைந்தன.
இதனால், திட்டமிட்டபடி ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் இணைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரும் கனவான ரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸிடம் இருந்து, இந்திய விமானப் படைக்கு வலுசேர்க்கும் வகையில், 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.