October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ள நேரிடும்; எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் நிகழக் கூடும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

பொது மக்கள் முதல் இரண்டு அலைகளிலும் எவ்வித பாடமும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை என எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு வரும் இச்சூழலில், சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிப்பதில்லை என குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

இந்திய மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் நிச்சயமாக மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது என அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

பொதுமக்கள் முகக்கவசம் முறையாக அணிவதில்லை எனக் கூறியுள்ள எய்ம்ஸ் தலைவர், இதுபோன்ற காரணங்களாலேயே, மூன்றாவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்படலாம் என தெரிவித்திருக்கிறார்.

6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளலாம் என்ற எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார் .

இந்தியா முழுவதும் மூன்றாவது அலை தாக்கம் தெரிய சற்று காலம் எடுக்கலாம் எனக் கூறியுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர், இருந்த போதிலும் அதன் பாதிப்பு தற்போது சிறிதாக ஆரம்பித்திருக்கலாம் என எண்ணுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.