January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தம்பி வா தலைமை ஏற்க வா’; தளபதி விஜய்க்கு ரசிகர்கள் வைத்த போஸ்டரால் பரபரப்பு

தமிழக முதல்வர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நடிகர் விஜய் இருக்கும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் ‘தம்பி வா தலைமை ஏற்க வா’ என வாசகங்களுடன் செங்கோல் ஏந்தியவாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

எதிர்வரும் 22 ஆம் திகதி நடிகர் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அவரை வாழ்த்தும் விதமாக இந்த போஸ்டரை ஒட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் விஜயுடன் செங்கோல் ஏந்தி நிற்பது போன்று அமைக்கப்பட்டுள்ள அந்த போஸ்டரில், ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட தம்பி வா தலைமையேற்க வா போன்ற கவர்ந்திழுக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

அரசியல் வசனங்களுடன்,அரசியலுக்கு அழைப்பது போன்று திண்டுக்கல் முழுவதும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.நடிகர் விஜய் தனது படங்களில் முக்கியமாக, சமீப காலமாக அரசியல் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் திரைத்துறையை தவிர்த்து அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.இருந்த போதிலும் தற்போது அரசியலுக்கு வரப்போவதில்லை என நடிகர் விஜய் கூறியிருக்கிறார். ஆனாலும் அவரது ரசிகர்கள் அவரை விட்டபாடில்லை.

22 ஆம் திகதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை அரசியலுக்கு அழைப்பது போன்று போஸ்டரை வடிவமைத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

இவ்வாறு விஜய் ரசிகர்கள் திண்டுக்கல்லில் ஒட்டியுள்ள பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.