July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகின் ‘மிகப் பெரிய குடும்பத் தலைவர்’ ஸியோனா சானா காலமானார்

file photo: Twitter/ Zoramthanga

உலகின் ‘மிகப் பெரிய குடும்பத் தலைவர்’ ஸியோனா சானா 76 வயதில் காலமானார்.

ஸியோனா சானா 39 மனைவிகள், 94 குழந்தைகள் மற்றும் 33 பேரக் குழந்தைகளுடன் இந்தியாவின் மிஸோராம் மாநிலத்தில் வாழ்ந்து வந்தவர்.

நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் போன்ற நோய்களால் ஸியோனா பாதிக்கப்பட்டிருந்தார்.

ஸியோனா சானாவின் குடும்பத்தில் 181 உறுப்பினர்கள் இருந்ததால், அவர் உலகின் ‘மிகப் பெரிய குடும்பத் தலைவர்’ என அழைக்கப்பட்டார்.

உலகின் மிகப் பெரிய குடும்பத் தலைவர் என ஸியோனா அறிமுகமானதைத் தொடர்ந்து, மிஸோராம் மாநிலத்தில் உள்ள அவரது கிராமமான பக்தாங் தலாங்னுவம், சுற்றுலாத்துறைக்கு பிரபல்யம் பெற்றிருந்தது.

இந்த விசித்திரமான குடும்பம் பக்தாங் தலாங்னுவம் கிராமத்தில் நான்கு மாடிகளையும் 100 அறைகளையும் கொண்ட வீட்டில் வசித்து வருகிறது.

கிறிஸ்தவ மதத்தின், பலதாரமணத்தை அனுமதிக்கும் மதப் பிரிவொன்றை ஸியோனா சானா பின்பற்றி வந்ததாகவும், குறித்த மதப் பிரிவு சானாவின் பாட்டனால் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மிஸோராம் மாநில முதலமைச்சர் இந்த மரணத்துக்கு கவலை தெரிவித்துள்ளார்.