June 17, 2025 17:16:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் அமெரிக்கா பயணம்

சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லை என்றால் அவ்வப்போது அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்து வரும் நிலையில் சிகிச்சை பெறும் நோக்கத்திலேயே அவர் அமெரிக்கா பயணமாகவுள்ளார்.

தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்லாமல் இருந்தார்.

தற்போது அமெரிக்காவில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துவிட்டதால் தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், தற்போது அரசு அனுமதி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்மாதம் 20 ஆம் திகதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் அவர் அமெரிக்கா செல்லவுள்ளதோடு, சிகிச்சை முடிந்த பின்னர் சிறிது காலம் ஓய்வு எடுத்து விட்டு இந்தியா திரும்பவுள்ளார்.

அதன் பின்னர் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.